தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பிற மதங்களை அவமதிக்கும் விதத்திலுமான சம்வங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றது.இச்செயற்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம் மக்களே ஒன்றினைந்து இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும் . ஒரு சில தரப்பினர் முஸ்லிம் மக்களை பகடகாயாக பயன்படுத்தி தங்களது முறையற்ற செயற்பாடுகளை பூர்த்தி செய்துக் கொள்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுப்பட்டு வாழ வேண்டும் என்றே பெரும்பாலான முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரது முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக அனைவருக்கும் அவப்பெயரே ஏற்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.