ஜனநாயகத்தினை பாதுகாப்பதில் பொதுமக்களை விட மேற்குலக இராஜதந்திரிகளுக்கே அதிக அக்கறை – டலஸ்

338 0

காலவரையறையின்றி  பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை  தேர்தலை விரைவாக  நடத்த மேற்குலக நாடுகள் ஐக்கிய தேசிய கட்சி  தலைமையிலான அரசாங்கத்திற்கு  அழுத்தம்  கொடுக்க வேண்டும். ஏனெனில் நாட்டில் உள்ளக ஜனநாயகத்தினை பாதுகாக்கும்   விடயத்தில் பொதுமக்களை  விட மேற்குலக  இராஜதந்திரிகளுக்கே அதிகம் அக்கறை காணப்படுகின்றது. இவர்களே  ஆட்சி  மாற்றத்தின் பொழுது  ஜனநாயகத்தை  பாதுகாக்குமாறு  அழுத்தம்  கொடுத்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும  தெரிவித்தார்.

எதிர்கட்சி   தலைவர்  காரியாலயத்தில் இன்று  புதன்கிழமை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றம்  கலைக்கப்பட்டமைக்கு  எதிராக  நீதிமன்றத்தை நாடிய  தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர்கள்   இன்று    மாகாண சபை தேர்தலை  நடத்துவது  தொடர்பில்  எவ்விதமான  அழுத்தங்களையும்  அரசாங்கத்திற்கு  பிரயோகிக்கவில்லை.  கடந்த  காலங்களில் பொதுஜன பெரமுன முன்னணியினர் மாத்திரமே  தேர்தலை  நடத்தகோரி  அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.  எதிர்வரும் நாட்களில் மாகாண சபை தேர்தலை நடத்த கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இவ்வேளையில் தேர்தல் ஆணையகம் எங்களுக்கு ஒத்துழைப்பு  வழங்க முன்வர வேண்டும். 

Leave a comment