மலையகத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் –

304 0

மலையகத்தில் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் வழங்கப்பட்டு மூன்றரை வருடங்கள் பூர்த்தியாக இருக்கும் இவர்களின் நியமனமானது இன்னமும் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்படவில்லை.

அவர்கள் உடனடியாக ஆசிரியர் தரத்திற்கு உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கான நியாயமான சம்பளமும் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியசேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அக்கடிதத்திலேயே ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

Leave a comment