கந்தானைப் பகுதியில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பாரியளவிலான சட்டவிரோத மதுபான போத்தல்லுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கந்தானை – இல 40-8 சேவியர் வீதி பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது 4 இலட்சத்து 50 ஆயிரம் லீற்றர் சட்டவிரோத மதுபான போத்தல்கள் 600 உடன் 41 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை , அதே பகுதியில் அதிகாலை 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 51 வயதுடைய தொடுபலவத்த , கல்உளிய பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1இலட்சத்து 87 ஆயிரத்து 500 லீற்றர் சட்டவிரோத மதுபான போத்தல்கள் 250 கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேக நபர்கள் இருவருக்கும் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதடன், மேலதிக விசாரணைகளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட வருகின்றனர்.