ராம்குமாரின் உடல் 13 நாட்களுக்குப் பிறகு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பொறுப்பாளரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரியுமான வைத்தியர் நாராயண பாபு குறிப்பிடுகையில்,
‘ராம்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக நான்கு அரசு மருத்துவக் கல்லூரி நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
அந்தவகையில், வழக்கின் விசாரணை அதிகாரியான திருவள்ளூர் 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி அனுமதி அளித்தால் உடற்கூறு பரிசோதனை இன்று நடைபெறும்.
மேலும் நீதிபதி உத்தரவளிக்கும் பட்சத்தில், ராம்குமாரின் உறவினர்கள் வந்தாலும், வரவில்லையென்றாலும் உடற்கூறு பரிசோதனை நடத்தி முடிக்கப்படும்; அவர் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் செப்டம்பர் கடந்த 18ஆம் திகதி மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராம் குமாரின் பிரேதப் பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.