மஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

320 0

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த போது குறித்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்தானந்த அளுத்கமகேயை மார்ச் மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a comment