தற்போதைய அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கூறுகின்றார்.
பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாமல் ஏனைய அனைத்து விடயங்களிலும் கூட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதவிர தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.