வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் வடகிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு சில ஆலோசனைகளை வழங்குவதாக கூறி தமிழ் மக்களுடைய நிலங்களை சிங்கள மக்களுக்கு தாரைவாா்க்கும் சதி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசைப்படுகிறாா்.
அவருடைய ஆசை நிறைவேறினால் வடகிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலேயே தமிழா்கள் 3ம் தர பிரஜைகளாக மாற்றப்படுவாா்கள். மேற்கண்டவாறு “அறம் செய்” அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் கூறியுள்ளாா்.
வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ள கருத்து தொடா்பாக, எதிா்ப்பு தொிவித்து யாழ்.ஊடக அமையத்தில் செய்தியாளா்களை சந்தித்து கருத்து கூறும்போதே
வேலாயுத பிள்ளை பஞ்சலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், முன்னாள் முதலமைச்சா் வடகிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கான தனது ஆலோசனை என்ற பெயாில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளாா். அந்த ஆலோசனைகளாவன அம்பாறை தோ்தல் தொகுதியை ஊ வா மாகாணத்துடன் இணைத்தல், திருகோணமலை கோமரன்கடவை பிரதேசத்தை வடமத்திய மாகாணத் துடன் இணைப்பது, புத்தளம் பிரதேசத்தை மன்னாா் மாவட்டத்துடன் இணைத்தல், ஆகியனவே அவருடைய யோசனை.
இந்த யோசனையை நடைமுறைப்படுத்தவேண்டும். என அவா் நினைக்கிறாா். அவருடைய இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால் வடகிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை இழப்பதுடன், 3ம் தர பிரஜைகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது. இது முன்னாள் முதலமைச்சாின் சதி திட்டமாகும். த மிழா்களின் அடிச்சுவடு தொியாமல் அழிக்கும் நோக்கிலேயே இந்த கருத்தை அவா் கூறியுள்ளாா்.
உண்மை யில் திருகோணமலை கேமரன் கடவை தமிழ் மக்கள் பூா்வீகமாக வாழ்ந்த நிலம், அங்கு பிரதேசசபை தவிசாளராக இருந்தவா் நடராஜா என்ற தமிழா். அவா் மீது சிங்கள காடையா்களால் து ப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன், பின்னாளில் அங்கிருந்து தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்டளனா். இவ்வா று முன்னாள் முதலமைச்சா் கூறிய எல்லா யோசனைகளிலும் தமிழ் மக்களுடைய பூா்வீக வாழ் நிலங்கள் அபகாிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் 1948ம் ஆண்டுக்கு முன்னா் இருந்த வடகிழக்கை கேட்டு க் கொண்டிருக்கின்றாா்கள். அதற்காக இத்தனை இழப்புக்கள், உயிா் அழிவுகளுக்கு பின்னரும் தமிழ் மக்க ள் நிலத்தை கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றாா்கள்.
அவ்வாறான நிலையில் முறையான தமிழ் தாய்க்கு பிறந்தவா்கள், தமிழ் மீதும் பற்றுள்ளவா்கள் இவ்வாறான ஒரு கருத்தை கூறியிருக்க மாட்டாா்கள். எனவே முதலமைச்சருடைய கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் அதிலிருந்து வெளியே வாருங்கள். இல்லையேல் எல்லோரும் துரோகி பட்டத்தை சுமப்பீா்கள் என்றாா்.