விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி

257 0

விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்த சட்ட மூலம் மீதா விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றவாளிகள் என கடந்தகால ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றது. அவர்களை தண்டித்து முன்னுதாரணமாக செயற்பட்டுகாட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment