அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் மோதி, பின்னர் ஒரு வீட்டின் முன்னால் விழுந்து நொறுங்கியது. நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 2 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் ஆப்பிள் கிரீக் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான விமானம், 76 ஆண்டுகள் பழமையானது. என்ஜின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விமானம் விழுந்தபோது, அருகில் இருந்த வீடு கடுமையாக குலுங்கி உள்ளது. ஆனால், வீட்டில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.