ரணில் நாட்டை விட்டு தப்பியோட வழிமுறை ஒன்று உள்ளது-வாசு

4586 0

பட்டலந்த படுகொலைகள் தொடர்பான  விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்தியிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை  பறிக்கப்பட்டிருக்குமெனவும் ஆகவே ரணில் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய ஒரே வழிமுறை மட்டுமே உள்ளது என  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்தினால்  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் வாசுதேவ எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணைக்குழுக்கள் திருத்த சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  வாசுதேவ நாணயக்கார  எம்.பி பட்டலந்த விசாரணை ஆணைக்குழு குறித்து பேசினார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  எதிரான பட்டலந்த விசாரணை அறிக்கை என்னவானது. விசாரணை ஆணைக்குழு பரிந்துரைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பிய போது  குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல :-  பிரதமர் எந்த ஆணைக்குழுவையும் நிராகரிக்கவில்லை. அவர் சாட்சியளித்துள்ளார். 

உங்களின் அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் அமுல்படுத்தப்பட்டன. அத்துடன் பிரதமர் உள்ளிட்டவர்கள் கூட ஆணைக்குழுக்கள் முன்பாக சென்று வாக்குமூலமளித்துள்ளனர். மத்திய வங்கிபிணைமுறி  தொடர்பான ஆணைக்குழுவின் முன்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட ஆஜராகி வாக்குமூலமளித்தார்  என குறிப்பிட்டார். 

Leave a comment