பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் கரம்,மற்றும் சதுரங்கப்போட்டிகள்.

5277 0

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர், மற்றும் ஏனைய போட்டிகளில் 2019 ம் ஆண்டுக்கான ஆரம்பப் போட்டி நிகழ்வாக 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்று கரம், சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றன. பரிசின் புறநகர்பகுதியில் ஒன்றான நந்தியார் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுனர் போட்டியின் முiகாமைமையாளர் ஆசிரியர் திரு. இராஜலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை 28.08.2006 முகமாலையில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை மயூரன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிமுகமையாளரால் போட்டிகளின் விதிமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் கழகத்தின் ஒத்துழைப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். போட்டிகளில் 149 போட்டியாளர்கள் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.
மாலை5.30 வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டியின் நடத்துநர்கள் இப்போட்டிகளை சிறப்புடன் நடாத்தி போட்டியாளர்களின், மக்களின் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment