திருமலையில் வைத்து 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை ஊடக அமைப்புக்கள் முன்னெடுக்கவுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் ஊடக படுகொலைகளிற்கான நீதி கோரி ஊடக அமைப்புக்கள் பங்கெடுக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் நடத்தப்படவுள்ளது.</p> |
<p style=”text-align: justify;”>ஏதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள், மற்றும் தென்னிலங்கை சகோதர ஊடக அமைப்புக்கள் இணைந்து பங்கெடுக்கவுள்ளன. ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. திருகோணமலையில் அதிரடிப்படைகளால் ஜந்து பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் செய்தி அறிக்கையிட்டதன் பின்னணியிலையே ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யபட்டார் என நம்பப்படுகிறது. |