கிளிநொச்சியில் இரவோடிரவாக இராணுவத்தினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

284 0

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு  சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கஞ்சா ஹெரோயின் உட்பட்ட போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பல்வேறு சுலோகங்களை தாங்கிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் நேற்றிரவு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் ஒட்டப்பட்டுள்ளன.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.  

இந் நிலையில் போதைப்பொருள் பாவனையை மக்கள் மத்தியில் இருந்து இல்லாது ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சுவரொட்டிகள் கிளிநொச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இரவோடிரவாக ஒட்டப்பட்டுள்ளன.

Leave a comment