வட மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனை கைதுசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கை காப்பாற்றும் நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தினால் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவரக்ளால் இன்று வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.
இதன்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பல பௌத்த அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தன.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.