சார்க் மாநாட்டில் இலங்கையும் பங்குகொள்ளாது

487 0

saarcஎதிர்வரும் நொவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சாக் மாநாட்டில் இலங்கையும் கலந்து கொள்வது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தின் தற்போதைய நிலையில் சார்க் மாநாட்டை நடத்துவது பொருத்தமாக இருக்காது என வெளிவிவகாரத்துறை அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களை காரணம் காட்டி மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள், தாம் இந்த வருட மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தன.

தற்போதைய சாக் அமைப்பின் தலைமையினைக் கொண்டுள்ள நேபாளத்திற்கு இந்த நாடுகள் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே, இலங்கை வெளிவிவகார அமைச்சு சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்பது குறித்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.