இலங்கையின் மனித உரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பேரவையில் விவாதம்

334 0

dcp28528மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளையும், இயலுமை விருத்தியை கட்டியெழுப்புவது தொடர்பிலும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பேரவையில் விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதுபல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்தன.

இலங்கையின் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை காண்பதற்கான ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கில் இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது யோசனைகளை முன்வைத்த அரச சார்பற்ற நிறுவனங்களில், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகள் எவையும் காப்பாற்றப்படவில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஒருவர் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரியுள்ளன.