வடக்கு மாகாணத்தில் 2291பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் ஒழிப்பு வாரத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், டெங்குநோய் தொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.வடக்கு மாகாணத்திலே யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண நகரிலே இதுவரை 1753 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.