தேசிய நீரோட்டத்திலிருந்து வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர்!

349 0

download-3தேசிய செயற்பாடுகளிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர் என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு 60 ஆண்டுகள் எடுத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று மிகவும் கோலாகலமாக ஆரம்பித்த 42ஆவது விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒதுக்கி வைத்தால் ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள், சேர்த்துக்கொண்டால் சேர்த்துக்கொள்ளுங்கள் என்ன மனநிலையையே இப்போது தமிழ் மக்கள் வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண மக்கள் வெளிப்படுத்தும் இந்தச் செய்தியையே கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களும் வெளிப்படுத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.பல இனம், பல மொழிகள் கொண்ட ஒரு நாட்டில் ஒரே இனம், ஒரே மொழி என சிலர் இனவாதம் பேசுவது நாட்டைப் பிளவுபடுத்தும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.