2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா கூறியுள்ளார்.
மீள்பரிசீலனை பெறுபேறு மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை 2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.