நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்க தயார்-தம்மிக பெரேரா

249 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் முன்னணி வர்த்தகர்களிடம் நாட்டுக்கு சேவையை பெற்றுக் கொண்டதாகவும், தற்போதைய தலைவர்களும் நாட்டின் எதிர்கால பயணத்திற்காக முன்னணி வர்த்தகர்களிடம் ஒத்துழைப்பு பெற வேண்டும் என்று பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா கூறியுள்ளார். 

தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியதுடன், தேவையென்றால் நிதியமைச்சின் செயலாளர் பதவியையும் ஏற்றுக் கொள்ள தான் தயார் என்றும் கூறியுள்ளார். 

இதேவேளை இலங்கையின் வடக்கு மாகாணம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

“மக்களுக்கு விளங்குகின்ற பொலிஸ் அதிகாரம் என்ன? தமது முறைப்பாடொன்றை பதிவு செய்ய சென்றால் தமது மொழியில் உடனடியாக செய்துகொள்ள முடியுமா என்பதே. 

வடக்கு மாகாணம் முழுவதற்கும் 56 பொலிஸ் நிலையங்களே இருக்கின்றன. ஆகவே ஒரு பொலிஸ் நிலையத்திற்கு 10 அதிகாரிகள் என்ற ரீதியில் 560 பேரை நியமித்தால், அந்த ஒவ்வொரு நிலையங்களுக்கும் 05 மோட்டார் சைக்கிள்களை வழங்கினால், 280 மோட்டார் சைக்கிள்கள், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன. 

ஆகவே இதுபோன்று மோட்டார்சைக்கிள்களை வழங்கி இதுபோல பொலிஸ் அதிகாரிகள் சிலரை வழங்கி ஏன் மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரும் வரையில் இருக்க வேண்டும்? மக்கள் தொலைபேசியில் அழைத்தால் ஏன் வீட்டிற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்ய முடியாது? 

உண்மையில் வடக்கில் 11 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 240,000 பிள்ளைகள் பாடசாலை செல்கிறார்கள். இந்த 240,000 இல் நூற்றுக்கு 30, 40 வீதமானவர்கள் காலையில் சாப்பிடாமல் செல்கிறார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment