சுவாதி கொலை வழக்கு தொடர்பாக பேஸ்புக் ஊடாக பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டவர் தமிழச்சி.
வெளிநாடொன்றில் வசித்தாலும், தமிழகம் தொடர்பாக பல தகவல்களை போட்டு சர்ச்சையை ஏற்படுத்தும் அவர் புதிய சர்ச்சையொன்றை கிளப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்ட தாக தெரிவித்தே அவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அவரது பதிவு இதோ,
‘தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக நம்பகமானவர்களிடம் இருந்து தகவல் வருகிறது.
இதை சொல்வதற்கும் அசாத்தியமான மனத்திடம் வேண்டி இருக்கிறது. ஒருவேளை இத்தகவல் பொய்யாக இருக்குமானால் என் மீதான விமர்சனங்கள் இனி எவ்வாறாக இருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது. ஆனால் ‘நாளை தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்’ என்று கூறி நாளை அறிக்க வேண்டிய அரசியல் உள்நோக்கத்தை தான் நாங்கள் மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகிறோம்.
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு தான் இருக்கிறார். தமிழச்சி சொன்னது புரளி என்றால் மகிழ்ச்சியே. அப்படி இல்லாமல் நாளை தான் ஜெயலலிதா இறந்தார் என்று அறிவிப்பார்களானால் எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களை முன்கூட்டியே நான் அறிவித்ததன் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை உலக தமிழர்கள் முன் வைத்திருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமன்றி இந்திய அரசு மீதும் அவர் குற்றசாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
எனினும் இத்தகவல்களை தமிழக தரப்புகள் முற்றாக மறுத்துள்ளன.