இலங்கை நாட்டில் ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்கும் பலம் மகிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
புதிய அமைச்சர்கள் நியமனங்களில் இலங்கை சர்வதேசத்தின் அரசியல் முறைமைகளையும் விஞ்சிவிடும் என நினைத்த கணப்பொழுதில் ஒருவர் அமைச்சராக மற்றும் அமைச்சர் அந்தஸ்த்து இல்லாமல் என பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் என்னவிருந்தும் பயனென்ன ஸ்தீரமான நிலையான அரசாங்கமொன்றை ஐக்கிய தேசிய கூட்டணியால் உருவாக்கிட முடியவில்லையே.
நெலும் மாவத்தையில் அமைந்து பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.