வத்தளை – ஹெந்தல பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி 10 இலட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
30 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பல்வேறு நபர்களிடம் இருந்த 50,000 ரூபாய் வீதம் பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 4 ஆம் திகதி வரை குறித்த வழக்கை ஒத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.