அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நியமிக்க ஆதரவளிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிக்க பொதுஜன பெரமுன ஆதரவளிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
என்னை பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். 19 ஆம் திருத்தத்தில் அவருக்கு போட்டியிட முடியாது என்று எந்த தடையும் இல்லை.
அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனுத் தாக்கல் செய்தால் அதனை நிராகரிக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணையாளரும் தெரிவித்திருக்கின்றார். அதனால் மஹிந்த ராஜபக்ஷவே எனது தெரிவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.