முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸசங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர் உள்ளிட்ட ஏழு பேருக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடாத்திச்செல்வதற்காக அவன்காட் மெரிடைம் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக அனுமதியளித்தன் ஊடாக 11.4 பில்லியன் ரூபாயினை அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமீபத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், ஒருவருக்கு இரண்டு இலட்ச ரொக்க பிணை மற்றும் தலா 10 இலட்ச சரீர பிணைகளில் அடிப்டையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அதேபோல் அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.