தலைவர் பதவி ராஜினாமா – ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய இளங்கோவன்

5386 22

elangovan_2514769fகாங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்த இயலவில்லை என்பதால் ராஜினாமா செய்துள்ளேன் என்று தனது ஆதரவாளர்களை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமாதானப்படுத்தினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது.
எனினும், 8 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இளங்கோவன் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, 40 மாவட்டத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் சென்னை மணப் பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் இல்லத்தின் முன்பு குவிந்தனர்.
தனது ஆதரவு மாவட்டத் தலைவர்களுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, சென்னை போரூரைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தீக்குளிக்க முயற்சித்தார்.
அவரை சக தொண்டர்கள் தடுத்தனர். அவரைப் போலவே, மேலும் 2 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் போது, ‘நீங்கள் ராஜினாமா செய்கிற பட்சத்தில், நாங்களும் ராஜினாமா செய்வோம்’ என்று இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் அவரிடம் நேரடியாகவே கூறினர்.
அப்போது மாவட்டத் தலைவர்களிடம் பேசிய இளங்கோவன், ‘காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்த வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதனை என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து கட்சி நடத்தவே விரும்பினேன் என குறிப்பிட்டார்.

Leave a comment