வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கடமையாற்றி வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோருக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
விக்னேஸ்வரனின் நிகழ்ச்சி நிரல் தெற்கின் இனவாத சக்திகளின் தேவைக்கு அமைய மேற்கொள்ளப்படுவதாக அறிக்கை கிடைத்துள்ளதாகவும் இது குறித்தும் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவில் கடமையாற்றி வரும் நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் தெற்கின் இனவாதிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், விக்னேஸ்வரனின் நடவடிக்கை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.