அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு நாளைய விடுமுறையை வேறு விடுமுறை நாளில் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.