விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 நாளை வரை கிடைக்கும்

249 0

பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பணம் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு இன்றும், நாளையும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படுகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணமும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்ற பொருட்கள் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களும், ரே‌ஷன் கடைக்கு சென்று ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை பெற்று வந்தனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சர்க்கரை அட்டை மற்றும் கவுரவ அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பணம் வழங்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசு வழங்கலாம் என்றும், மற்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் மட்டும் வழங்கலாம் என்றும் உத்தரவில் கூறி இருந்தனர்.

இந்த தடை உத்தரவை மாற்றியமைக்கக் கோரி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐகோர்ட்டு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பொருட்கள் வழங்க உத்தரவிட்டது.

இதையடுத்து சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களும் ரேசன் கடைக்கு சென்று ரூ.1000 பணத்துடன் பொங்கல் பொருட்களை பெற்று வந்தனர்.

ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு இன்றும், நாளையும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படும்.

எனவே ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்காதவர்கள் இன்றும், நாளையும் ரேசன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம்.

Leave a comment