கடந்த 18ஆம் திகதி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஸ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய இராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளர்.
இந்த தாக்குதலில் 18 இந்திய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு பதில் தாக்குதலாக நேற்று அதிகாலை இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது.
இந்த தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் யுக்தியை இந்திய இராணுவம் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான் மற்றும் தரை மார்ககமாக ஊடுருவி தமிழீழ விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, தாக்குதலை விடுதலைப்புலிகள் படமாக்குவதுபோல் படமாக்கியுள்ளதாக இந்திய இராணுவதினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப்படையினரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட இந்த அதிரடித் தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் பாணியில் வீடியோவில் பதிவு செய்துள்ளதா இந்திய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.