வவுனியாவில் டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு ; இருவர் மரணம்

308 0

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 596 டெங்குநோயாளர்கள் இனஞ்காணப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த வருடம் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக கேட்ட போதே மேற்படிதெரிவித்தார். 

மேலும் தெரிவித்த அவர்,  

வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் 107 நோயாளர்களும், வவுனியா வடக்கு  சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில்  36 நோயாளர்களும், வவுனியா தெற்கு  சுகாதாரவைத்திய அதிகார பிரிவில்  48 நோயாளர்களும் இனஞ்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு நோய் தாக்கத்தின் மூலம் வவுனியாவை சேர்ந்த இரண்டு பேர் கடந்த வருடம் மரணித்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்ததுடன், இன்னுமொருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்குநுளம்பை அழிக்கும் மீன்கள் விடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment