தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு இடம்பெற்ற நினைவு நாளின் போது உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களை கொலை செய்வதோ அல்லது மக்களின் சொத்துக்களை சிதைப்பதோ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கம் அல்ல.
மாறாக தமிழ் இன மக்களை அழித்தொழிக்கும் இராணுவத்தை அழித்து, வீழ்த்துவதைதான் தன் நோக்காக கொண்டிருந்தனர். தமிழ் மக்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்த போதிலும், பதிலுக்கு பிரபாகரன் சிங்கள மக்கள் மீது எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், உறுப்பினர்களும் அறத்தின் வழியில் நின்று போராடியமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அனைவரும் கூறுவதை போன்று பிரபாகரன் தீவிரவாதியாக இருந்திருந்தால் இலங்கையில் பேரளிவுகளை ஏற்படுத்தியிருப்பார். எனினும், அறத்தின் வழியில் போராடியதால் அவ்வாறு ஏதும் செய்யவில்லை எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.