விளையாட்டுத் துறையில் புதிய மாற்றங்கள்- அமைச்சர் செங்கோட்டையன்

275 0

தமிழக விளையாட்டுத் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள தேர்கள் மாற்றி புதிய தேர்கள் அமைக்கப்படும்.

பொங்கல் பரிசு ரூ.1,000 சர்க்கரை கார்டு உள்ளவர்களுக்கும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு சொல்லி தர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக விளையாட்டுத் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். கோபி செட்டிபாளையத்தில் உள் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மைதானம் அமைக்கப்படும்.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முன்பே ஒன்று முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறித்த நாளில் திட்டமிட்டப்படி தேர்வுகள் நடக்கும்.

தமிழக அரசு சார்பில் கல்விதுறைக்கு என தனியாக ஒரு சேனல் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் குருவாக நேசிக்கவும், பெற்றோர்களை நேசிக்கவும் இந்த சேனல் பயன்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின்போது அருகில் அமைச்சர் கே.சி.கருப்பணன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a comment