பௌத்த மதத்துக்குரிய இடத்தை இல்லாமல் செய்கிறார்கள், நாட்டைப் பிரிக்கிறார்கள் என்ற பேச்சுக்களுக்கு இந்த புதிய அரசியலமைப்பில் இடமில்லையெனவும், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவுக்கு அரசியல் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தை அழித்துவிடுகின்ற, நாட்டைப் பிரிக்கின்ற அரசியலமைப்பு சட்ட மூலமொன்றை நாம் கொண்டுவரத் தயாரில்லை. அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளவர்கள் நாட்டைப் பிரிக்கின்றார்கள், பௌத்த மதத்துக்குள்ள அந்தஸ்தை இல்லாமல் ஆக்குகின்றனர் என கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
பௌத்த மதத்துக்கு முதலிடம் கொடுப்பதில் எம்மிடம் மாற்றுக் கருத்துக் கிடையாது எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளனார்.