2011 ஆண்டு காரத்திகைதான் அவனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதுவரை அஸ்வினை எனக்குத் தெரியாது. அண்ணா நீங்கள் பணியாற்றிய இருக்கிறம் வார இதழை வீரசேகரி திட்டமிட்டு முடக்கிவிட்டதாக அறிந்தேன். நீங்கள் யாழ் ஓசையுடன் இணைந்துவிடுங்கள். நான் யாழ்ப்பாணத்தில்தான் நிற்கிறேன் நேரில் வாருங்கள் சந்திப்போம் என்றான்.
யாழ் ஓசையும் வீரகேசரி குழுமத்தினது பதிப்புதானே அஸ்வின் மீண்டும் அதே கட்டமைப்பிற்குள் நுளைய உடன்பாடில்லை என மறுத்துவிட்டேன்.
பின்னர்தான் காட்டூனிஸ்ட் அஸ்வினாக நெருக்கமானான்.
அண்மையில் ஊடக விஜயம் ஒன்றின்போது கொழும்பு சென்றபோது 3 நாட்களும் எங்களுடனேயே தங்கியிருந்தான். அண்ணா நீங்கள் அன்று எடுத்த முடிவுசாரியானதுதான் யாழ் ஓசையும் இடையில் முடங்கிவிட்டதே என எம் முதல் சந்திப்பை நினைவுபடுத்தி தொடர்ந்த உரையாடல் பலமணிநேரம் நீடித்தது.
ஊடக சுற்றிலாவில் எமது அணியுடனேயே கூட எங்கும் வந்தவன் ஒவ்வொரு இடத்திலும் தன்னை அதிக படங்கள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டேயிருந்தான். காலி மியூசியம் ஒன்றில் பொம்மைகளுக்கு நடுவே அவன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்று பார்த்தபோது கண்கள் பனித்துவிட்டன.
மொம்மைகளுக்கு நடுவே அவனும் பொம்மையாகிவிட்டானே !
தோழனே உன் ஆத்மா சாந்திபெறட்டும்.
ஊடக நண்பன்- அருமைத்துரை யசீகரன்