அப்புத்தளை பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

211 0

அப்புத்தளை பிரதேச சபையின் இவ்வருடத்திற்கான 2019 வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கை இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டதும் நான்கு அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இவ்வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை கடந்த (25-12-2018) சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதும் அறிக்கை தோல்வியைத் தழுவியது.

அதையடுத்து  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற பலசுற்று பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதையடுத்து மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு  செலவுத்திட்ட நிதி அறிக்கைரூபவ் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதும் நான்கு அதிகப்படியான வாக்குகளினால் நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

இவ் வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இரு கட்சிகளைச் சார்ந்த 12 உறுப்பினர்கள் நிதி அறிக்கைக்கு ஆதரவாகவும்,சபையின் ஐக்கிய தேசிய கட்சி சார் உறுப்பினர்கள் 7 பேரும் சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவருமாக எட்டுப்பேர் எதிராகவும் வாக்களித்தனர். 

இதனடிப்படையில் நான்கு மேலதிக வாக்குகளினால் நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

அப்புத்தளை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று மேற்படி நிதி அறிக்கை சமர்ப்பிக்கும் சபை அமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment