இந்திய ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அக்டோபர் 5-ம் திகதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் ஒரு சதி முறியடிப்பு என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆதரங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது சதி முறியடிப்பு தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியது.
இதனால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லைப் பகுதியில் இரு நாட்டினரும் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், அக்டோபர் 5-ம் தேதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.