மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வரவு செலவு திட்டம்-ரணில்

234 0

நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய வரவு செலவு திட்டம் முன் வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது. 

இதன் போது பிரதமர் விசேட ஒன்றை நிகழ்த்தினார். நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளதாகவும் பிரதமர் கூறினார். 

சமூக மற்றும் பொருளாதாரம் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. சுற்றுலாவுக்காக உலகத்தில் சிறந்த கிராமமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த தருணத்தில் நாட்டில் நிலையியற் தன்மை பேணப்பட வேண்டும். சில நாடுகள் இலங்கை, சுற்றுலா செல்ல சிறந்தநாடு இல்லையென பேரிட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். 

குழப்ப நிலை நீடித்த 51 நாட்களில் ரூபாவின் பெறுமதி 3 தசம் 8 வீதமாக வீழ்ச்சியடைந்ததாக தெரிவித்த அவர், குழப்ப நிலை நீடித்த காலத்தில் எந்தவொரு நாடோ, சர்வதேச நாணய நிதியமோ எந்தவிதமான கடன் உதவிகளையும் இலங்கைக்கு வழங்கவில்லை. 

அந்தக் காலப்பகுதியில் எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாமையினால் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாட்டை கட்டியெழுப்பும் வகையில் இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் ரூபாவின் பெறுமதியை நிலையாக பேண அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துமெனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருந்த சாவலை வெற்றிகொண்டதுபோல் பொருளாதார சவால்களும் வெற்றி கொள்ளப்படும். 

புதிய பிரதமர் நியமனத்தை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் சதியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு முன்பிருந்த நிலையிலும் உன்னத இடத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பு தங்களுடையது என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

Leave a comment