பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்துக் கொள்ளாமல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஒருபோதும் எத்தேர்தல்களிலும் வெற்றிப் பெற முடியாது.
இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவது என்பது கட்சியின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் ஒரு செயற்பாடாகவே காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
துரதிஸ்டவசமாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டபல். அது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அவரது குடும்த்தினருக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவர்களுக்கு பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமைத்துவத்தினால் மாத்திரமே பாதுகாப்பு வழங்க முடியும். மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை அரசியலில் செல்வாக்கு செலுத்தமாட்டார்.
சுதந்திர கட்சியினையும், அதன் தலைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் எமக்கு காணப்படுகின்றது என்றார்.