சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிரான வழக்கு 25ம் திகதி

230 0

125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிரான வழக்கை ஜனவரி 25ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகளான உபலி குணரத்ன, வசந்த விமலவீர, உபாலி விக்ரமசிங்க மற்றும் எஸ்.பி. ஜினதாச ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். 

குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2015ம் ஆண்டு, இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பாகங்கள் சிலவற்றை விடுவிப்பது தொடர்பில் சந்தேகநபர்கள் 125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment