2018இல் சந்திரயான் – 2 நிலவுக்கு பயணம் – இஸ்ரோ விஞ்ஞானி உறுதி

530 0

isssssssssss2018 ஆம் ஆண்டு ஏவப்பட உள்ள சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் இறங்கி, மாதிரிகளைச் சேகரிக்கும் என்று திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானியும், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இணை இயக்குநருமான எஸ்.பாண்டியன் தெரிவித்தார்.
அண்மையில் 20 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி, இந்தியா சாதனை படைத்தது. இதில், 13 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுக்குச் சொந்தமானவை.
செலவு குறைவு என்பதால், அனைவரும் இந்தியாவை நாடுகின்றனர்.
2014இல் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பப்பட்டது. 2018இல் அனுப்பப்படும் சந்திரயான்-2 நிலவில் இறங்கி, மாதிரிகளை எடுத்து அனுப்பும். அதேபோல, 2020இல் வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது.

Leave a comment