சீன கடற்படை கடந்த 200 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து உள்ளது!

245 0

இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ள சீன ஆதிக்கம் குறித்து கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா கவலை தெரிவித்துள்ளார்.

கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா கூறியதாவது:-
எந்த நேரமும், இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் 6-8 சீன கடற்படை கப்பல்கள் உள்ளன.  கடந்த 200 ஆண்டுகளில் சீனக் கடற்படையைப்போல  எந்தவொரு கடற்படையும் அவ்வளவு வேகமாக வளர்ந்திருக்கவில்லை. அவர்கள் ஒரு சக்தியாக இருக்கிறார்கள், அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்கியுள்ள சக்தியாக இருக்கிறார்கள்.சீனர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 புதிய கப்பல்களை கப்பற்படையில் சேர்த்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு முதல் சீன கடற்படை இந்தியபெருங்கடல்  கடற்பரப்பில் கடற் கொள்ளையர் எதிர்ப்பு சக்தி என்ற போர்வையில் ஒரு நிரந்தர இருப்பாக உள்ளது. ஏதென் வளைகுடாவில் 31-வது கடற் கொள்ளையர்  எதிர்ப்பு கடற்படை  உள்ளது.
கடற் கொள்ளையர் எதிர்ப்பு  நடவடிக்கைகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.  இந்த பகுதி அவர்கள் பயன்படுத்த மிகவும் சாத்தியமான தளம் ஆகும்.
இராணுவத் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு பெரும் தொகையை அவர்கள் செலவிடுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அவர்கள் படைகளை நவீனமயமாக்குகிறார்கள், அவை உத்தரவு  அமைப்பை நவீனப்படுத்துகின்றன என கூறி உள்ளார்.

Leave a comment