இந்திய ராணுவ சிறப்பு படையின் துல்லியமான தாக்குதல்

446 0

kashmir_3028776fபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நள்ளிரவில் அதிரடி தாக்குதல்

7 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; எல்லையில் போர் பதற்றம் – பள்ளிகள் மூடல்; கிராம மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் நள்ளிரவில் வான்வழியாக தரையிறங்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பார முல்லா மாவட்டம் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ம் தேதி அதிகாலை 4 பாகிஸ்தான் தீவிர வாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்ப தாகவும் அவர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத் துறையினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து புதன்கி ழமை நள்ளிரவு 12.30 மணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் ‘துல்லி யமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) என்ற ரகசிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினர். பாகிஸ்தான் முப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவி ஹெலிகாப்டர்கள் மூலம் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த பாராசூட் வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 7 இடங்களில் தரையிறங்கினர்.

எல்லையில் இருந்து 500 மீட்டர் முதல் 3 கி.மீ. தொலைவு வரை முன்னேறிய இந்திய வீரர்கள், பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா உள்ளிட்ட 7 பகுதிகளில் அமைக் கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக் குதல் நடத்தினர். இதில் 7 முகாம் களும் முழுமையாக அழிக்கப் பட்டன. சுமார் 4 மணி நேர சண்டைக்குப் பிறகு வியாழக் கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ரகசிய ராணுவ நட வடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த ராணுவ நடவடிக்கைகளை தலைமைத் தளபதி தல்பீர் சிங் கட்டுப் பாட்டு அறையில் இருந்து நேரடியாகக் கண்காணித்தார்.

இதுகுறித்து ராணுவ கட்டுப் பாட்டு இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான தீவிர வாதிகள் பாகிஸ்தான் மண்ணில் செயல்பட அனுமதிக்கமாட்டோம் என்று 2004-ம் ஆண்டில் பாகிஸ் தான் உறுதியளித்தது. ஆனால் அந்த உறுதிமொழியை காப்பாற் றவில்லை. இந்தியா மீது பாகிஸ் தான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் காஷ்மீர் எல்லையில் 20 ஊடுருவல் முயற்சிகளை முறியடித்துள்ளோம். கடந்த 18-ம் தேதி உரி ராணுவ முகாமுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து19 வீரர்களை கொலை செய்தனர்.

தாக்குதல் நடத்திய 4 தீவிர வா திகளையும் சுட்டுக் கொன்றோம். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவி கள், ஆயுதங்களில் பாகிஸ்தானின் முத்திரைகள் இருந்தன. இது தொடர்பாக பாகிஸ்தானிடம் ராஜ்ஜிய ரீதியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு உட்பட காஷ்மீரின் பல்வேறு பகுதி களில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதை உளவுத் துறையினர் உறுதி செய்தனர். அதன்பேரில் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு காஷ்மீ ருக்குள் ஊடுருவ காத்திருந்த தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம். இந்தி யத் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட வில்லை.

இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்துக்கு முறைப்படி தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத் துக்கு எதிரான நடவடிக்கைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரகசிய ராணுவ நடவடிக்கையின் முழுமையான விவரங்கள் வெளியிடப்பட வில்லை. எனினும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதி கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க லாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏழு தீவிரவாத முகாம்கள் அழிக்கப் பட்டிருப்பதாக இந்திய ராணுவ கட்டுப் பாட்டு இயக்குநர் ரன்பீர் சிங் கூறியுள் ளார். ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது 10 தீவிரவாதிகள், வழிகாட்டிகள் தங்கி யிருந்ததாக உளவுத் துறை தெரிவித் துள்ளது. அந்த வகையில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம். பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 பாக். வீரர்கள் பலி

இந்திய ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மூத்த தளபதி அசிம் பஜ்வா கூறியதாவது: பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. அந்த நாட்டு ராணுவம் வதந்திகளைப் பரப்பி வருகிறது.

இந்திய ராணுவம் நேற்று சண்டை நிறுத்தத்தை மீறி தாக்கு தல் நடத்தியது. இதில் எங்கள் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவர் காயம டைந்தார். இந்திய ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

போர் பதற்றம்

இந்திய ராணுவ தாக்குதலால் இரு நாடுகளிடையேயும் தற்போது போர் பதற்றம் எழுந்துள்ளது. இந்திய தரப்பில் பஞ்சாப், காஷ்மீர் எல்லையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி யில் மூத்த அமைச்சர்கள், ராணுவ தளபதிக ளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நேற்று மாலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்திய ராணுவ தாக்குதல் குறித்து கூட்டத்தில் ராஜ்நாத் சிங் விளக்கிக் கூறினார். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் உறுதி அளித்தனர்.

இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாதில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில், தெற்காசியாவின் அமைதியை இந்தியா சீர்குலைக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

மக்கள் வெளியேற்றம்

எல்லையில் போர் பதற்றம் நிலவுவதால் காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி சுமார் 10 கி.மீ. வரை உள்ள கிராமங் களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி களுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்றால் என்ன?

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் ‘துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) என்று அழைக்கப்படுகிறது.

இது போர் அல்ல. ஒருவகை ரகசிய, அதிரடி ராணுவ நடவடிக்கை ஆகும். தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் கலவரக்காரர்கள், தீவிரவாதிகளின் முகாம்களைக் குறிப்பிட்ட நேரத்தில் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு மீண்டும் நிலைக்குத் திரும்ப வேண்டும்.

இந்த தாக்குதலின்போது ராணுவ வீரர்களுக்கோ, பொதுமக்கள் வசிக்கும் சுற்றுவட்டார பகுதிக்கோ பெரிய சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நினைத்துப் பார்க்காத தாக்குதலை நடத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்து, மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்த வேண்டும். இதைத்தான் ‘துல்லியமான தாக்குதல்’ என்று அழைக்கின்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் சங்கர் பிரசாத் கூறியதாவது: இந்திய ராணுவம் தற்போது நடத்திய தாக்குதல் மிகவும் சிக்கலானது. தீவிரவாத முகாம்கள் மலைப்பகுதியில் அமைந்திருந்தன. அங்கு கொரில்லா தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். அவர்களைத் தப்பவிடாமல் தாக்க வேண்டும். அதேநேரம் இந்தியப் படைக்கு எவ்வித இழப்பும் நேரிடக்கூடாது. இதை மிகத் துல்லியமாகக் கணித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நவாஸ் அதிர்ச்சி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய ராணுவ தாக் குதலை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். காஷ்மீர் எல்லையில் இந்தியா – பாகிஸ் தான் ராணுவம் இடையே அடிக்கடி சண்டை நிறுத்தம் மீறப்படுகிறது. அதுகுறித்து நவாஸ் ஷெரீப் எவ்வித கருத்தும் தெரிவிப்பது இல்லை.

இந்திய ராணுவத்தின் நேற் றைய தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த அவர் அறிக்கை வெளியிட்டார். அதில், எங்கள் அமைதியை பலவீனமாக கருதிவிட வேண்டாம். சதி, சவால்களை முறியடிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மியான்மர் தாக்குதல் பாணி..

கடந்த 2015 ஜூன் 4-ம் தேதி மணிப்பூரின் சண்டல் பகுதியில் நாகா தீவிரவாதிகள் 18 இந்திய வீரர்களைக் கொலை செய்தனர். அதே பாணியில் தற்போது எல்லையிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முழு விவரம்: | ராணுவ துல்லிய தாக்குதல்: மியான்மரில் நடத்திய தாக்குதல் பாணி |

உரிய நேரத்தில் வீடியோ ஆதாரம்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ தாக்குதல் முழுவதும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை எப்போது, எங்கு வெளியிட வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். உரிய நேரத்தில் வீடியோ வெளியிடப்படும். முழு விவரம்: | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை வீடியோவை உரிய நேரத்தில் வெளியிடுவோம்: பாதுகாப்புத் துறை தகவல் |

கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து:

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் தினமும் நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்ச்சியை இந்தியா எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வியாழக்கிழமை ரத்து செய்தது. விரிவான செய்திக்கு: | ராணுவ துல்லிய தாக்குதல்: அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து |

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து:

பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரு வதையும் உடந்தையாய் இருப் பதையும் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு:|‘இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்’: பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை |

சோனியா வரவேற்பு:

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்கு தல் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. முழு விவரம்: | பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை: சோனியா காந்தி கருத்து |

25 நாடுகளுக்கு தகவல்:

மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கர் தகவல் தெரிவித்தார்.