இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதி உதவியில் வாழ்வாதார உதவிகள்.
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் உள்ள சிறீ சித்திவிநாயகர் கோவில் தமிழீழத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றது. அந்த வகையில் வட்டக்கச்சி,அக்கராயன் மற்றும் தேவிபுரம் பகுதிகளில் முதற்கட்டமாக உலருணவுப் பொதிகளையும் கற்றல் உபகரணங்களையும் வழங்கியுள்ளது.
அத்தோடு இன்று வட்டக்கச்சியில் உள்ள மூன்று குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பால்மாடுகளை வழங்கி உதவி செய்துள்ளது.
ஜேர்மனியில் இருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான வள்ளிபுனம். தேவிபுரம் குரவில்…ஆகிய கிராமங்களில் உள்ள 50 பேருக்கு அதாவது கடந்த கால யுத்தத்தால் தங்களுடைய பிள்ளைகளை இழந்த கணவனை இழந்த. மற்றும் தங்களுடைய அவயவங்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களுக்கு 76 ஆயிரத்து 210 ரூபா பெறுமதியில் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது எனவே ஏழைகள் மீது இரக்கம் கொண்டு உதவியைப் புரிந்த ஜேர்மனியில் இருக்கும் சிறீ சித்திவிநாயகர் ஆலய Stuttgart அமைப்பினருக்கு தாமரை மாற்றுத்திறனாளிகள் சார்பாகவும் பயன் பெற்ற பயனாளிகள் சார்பாகவும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு இவ்வுதவியை எமக்கு பெற்றுத்தந்த புலம்பெயர் உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.