பந்துலவுடன் வாதம் புரிவதில் பிரயோசனமற்றது – அகிலவிராஜ்

326 0

நாட்டில் கடந்த 26 ஆம் திகதி அரசியல் நெருக்கடிக்கு முன்னர் பொது எதிரணியில் இருக்கும் போது, ரூபாவுடன் ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி அதிகரித்தமை தொடர்பாக எமது அரசாங்கத்துக்கு சவால்விடுத்த பாராளுமன்ற பந்துல குணவர்தன, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் டொலரை கைகளினால் பிடித்து இடைநிறுத்தவா முடியும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு வேறுபட்ட கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கும் அவருடன் வாதம் புரிவது பிரயோசனமற்றது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.. 

2018 ஆம் ஆண்டு; நடைபெற்ற க.பொ.த (உயர்தர) பரீட்சையில் கலை பிரிவில் பெறுபேறுகளின் பிரகாரம்  சர்வதேச பாடசாலை மாணவியொருவர் நாடளாவிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுகொண்டமை தொடர்பாக விவாதத்திற்கு வருமாறு முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்த சவாலுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது எவரினாலும் அதனை நிறுத்த முடியாது. எனினும் எமது ஆட்சியின் போது உலக சந்தை எரிபொருள் விலை அதிகரிக்கும் போது நாம் அதனை கட்டுப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர் வேறு கதை கூறுகின்றார். எனவே அவருடைய கருத்துகளை நோக்கும் போது பாரியளவில் வேறுபாடுகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment