இலங்கையில் அமெரிக்க கடற்படை தளமொன்று அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அண்மைக்காலமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல்களுக்குகான சேவை வழங்கள்கள் இடம்பெற்றுவருவதாகவும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இராசாயன ஆயுதங்கள் சமவாயகம் திருத்த சட்டமூலம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
இலங்கையில் இரசாயன திரவங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு சில அமைசிக்களின் மூலமாக நாட்டுக்கு தேவையான சில இரசாயான திரவியங்கள் கொண்டுவரப்படுகின்றது. சில சட்டங்களில் அது அனுமதிக்கவும் பட்டுள்ளது.
குறிப்பாக விவசாயத்துக்கு தேவையான சில இரசாயான திரவங்கள், பாதுகாப்பு சார் கண்ணீர்ப்புகைக்கு கலக்கும் இரசாயான திரவியம் என்பன உள்ளடக்கப்படுகின்றது.
இதில் கண்ணீர்ப்புகைக்க்காக பயன்படுத்தப்படும் திரவம் என்ன என்பது குறித்து எங்கும் சுட்டிக்காட்டப்படவில்லை. இந்த திரவம் உடலில் பட்டதும் தோல் நோய்கள் ஏற்படும் நிலைமையும் ஏற்படுகின்றது. கூட்டங்களை கலைக்க வேண்டும் என்றால் அதற்கு தண்ணீர் தாக்குதலே போதுமானது. ஆனால் கண்ணீர் புகை பிரயோகம் என்பது ஒருவித தண்டனை கொடுக்கும் முறைமையாகவே உள்ளது.
ஆகவே இதனை தடுக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.