ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தால் மீண்டும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் இலங்கைக்கான தூவராக கடமையாற்றிய ஜாலிய விக்கிரம சூரியவை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.
வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கியிருந்த நிலையில் குறித்த கால எல்லைக்குள் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் நீதிமன்றம் மீண்டும் கைதுசெய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருடைய பிணைக்காக முன்னின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் உறவுக்கார சகோதரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஏற்கனவே நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவராக ஜாலிய விக்கிரமசூரிய கடமையாற்றியபோது தூதுவருக்கான கட்டடத்தொகுதி கொள்ளவனவில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.