அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இருவர் கைது

255 0

​தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து 35 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற முயற்சித்த இரண்டு பேர் மிரிஹானை விஷேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்தமை தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதன்படி மிரிஹானை விஷேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு நேற்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடுவலை மற்றும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர். 

சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மிரிஹானை விஷேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment