சிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம – கெகுனஎல்ல வீதியை அபிவிருத்தி செய்யும் பாணியில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர் வேகடவல ராகுல தேரர் கூறுகிறார்.
இந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக சிங்காரஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம் நிலவுவதாக அவர் கூறுகின்றார்.
இது சம்பந்தமாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் மஹிந்த செனவிரத்னவிடம் அத தெரண செய்திப் பிரிவு வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அவர், அந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக எவ்வித சூழல் பதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று கூறினார்.